Published : 24 May 2022 07:11 AM
Last Updated : 24 May 2022 07:11 AM

கிருஷ்ணகிரி | சொத்துகளை அபகரித்துக் கொண்டதாக மகன்கள் மீது 103 வயது மூதாட்டி புகார்

103 வயது மூதாட்டி துளசியம்மாள்.

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே சொத்துகளை அபகரித்துக் கொண்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆட்சியரிடம் 103 வயது மூதாட்டி கோரிக்கை விடுத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், போச்சம்பள்ளி வட்டம் கவுண்டனூர் அடுத்த பள்ளத்துகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி துளசியம்மாள் (103) நேற்று மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கு 3 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் எனக்கு சொந்தமான 5.50 ஏக்கர் நிலத்தை எனது 3 மகன்கள் அபகரித்துக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். எந்த மகனும் என்னை வீட்டிற்குள் சேர்ப்பதில்லை. தற்போது எனது மகள் நாகம்மாள் பராமரிப்பில் இருந்து வருகிறேன். என்னிடம் சொத்தை அபகரித்த, மகன்களிடமிருந்து சொத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்னும் ஒரு வாரத்திற்குள் கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x