Last Updated : 10 May, 2022 05:02 PM

 

Published : 10 May 2022 05:02 PM
Last Updated : 10 May 2022 05:02 PM

தஞ்சை | கணவர் இறந்த சோகத்தில் மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்: 2 சிறுவர்கள் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் கணவர் இறந்த சோகத்தில் மகன்களுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறியது: பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சத்யா (30). இவர்களுக்கு முகேஷ் (7), நிதீஷ் (5) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகுமார் இறந்தார்.

அதிலிருந்து கணவர் இறந்த துக்கத்தில் இருந்த சத்யா, தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் ஆதவரவற்றவர்கள் ஆகிவிடுவார்கள் என்ற நிலையில் மனதை கல்லாக்கி கொண்டு விஷமருந்தை வாங்கி முதலில் தனது மூத்த மகன் முகேஷுக்கு கொடுத்துள்ளார். அடுத்து இளைய மகன் நிதிஷுக்கு கொடுத்துள்ளார்.

இருவருக்கும் கொடுத்துவிட்டு சத்யா விஷத்தை குடிக்கும் சமயத்தில் அங்கு வந்து அவரது உறவினர் ரெங்கசாமி விஷத்தை தட்டிவிட்டார். உடனே தாய் மற்றும் மகன்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நிதிஷ் (5) உயிரிழக்க, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மற்றொரு மகன் முகேஷ் (7) இன்று அதிகாலை உயிரிழந்தனர்.

தற்போது தாய் சத்யா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரெங்கசாமி (49) கொடுத்த புகாரின் பேரில் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்ததும், அதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x