Published : 25 Apr 2022 06:08 AM
Last Updated : 25 Apr 2022 06:08 AM
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கீழவளவு அருகில் உள்ள கரியாபட்டியைச் சேர்ந்தவர் சகிதா பேகம்(29). சிறுமியின் உறவினரான இவர், ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சகிதா பேகம், கணவரை பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற அவர், பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாகப் பழகி இருக்கிறார். சிறுமிக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோதுதான், சகிதா பேகத்துடன் பழகுவது தெரிய வந்தது. இதற்கிடையில் உறவினர் வகிதா பானு(29) என்பவரின் உதவியோடு, சிறுமியை சகிதா பேகம் ஏப்.6-ம் தேதி திருமணம் செய்தார். பின்னர் மேலூரில் உள்ள தங்கும் விடுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர் மேலூர் மகளிர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் ஆய் வாளர் ரமாராணி வழக்குப் பதிவு செய்து சகிதாபேகம், வகிதா பானு ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT