Published : 21 Apr 2022 08:17 AM
Last Updated : 21 Apr 2022 08:17 AM
கோவை: கோவையில் ஆண் நண்பரை பழிவாங்குவதற்காக, அவரது மனைவி, மகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பெண்ணை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கும், திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூர் பகுதியைச் சேர்ந்த அழகுகலை நிபுணர் உமா ரஞ்சனி (28) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதை அறிந்து மனைவி கண்டித்ததால், உமா ரஞ்சனியுடனான தொடர்பை தனியார் நிறுவன ஊழியர் கைவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உமாரஞ்சனி, ஆண் நண்பரை பழிவாங்குவதற்காக அவரது மனைவி, 15 வயது மகளின் புகைப்படங்களை அவதூறு வார்த்தைகளுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவி, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், போக்ஸோ ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து உமா ரஞ்சனியை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT