Published : 11 Apr 2022 06:30 AM
Last Updated : 11 Apr 2022 06:30 AM
சேலம்: சேலம் அருகே வனப்பகுதியில் உரிமம் இல்லாத 3 துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சேலம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட லோகூர் மேல்காடு பகுதியில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வன ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, 3 பேர் துப்பாக்கியுடன் நின்றனர். அவர்களிடம் வனத்துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில், மேல்காடு பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் (60), வால்காடு முருகன் (52),நவநீதன் (36) என்பதும், அவர்கள்வன விலங்குகளை வேட்டையாடவனப்பகுதியில் சுற்றியது தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்த உரிமம் இல்லாத 3 துப்பாக்கிகள், பால்ரஸ் குண்டுகள், வெடிமருந்து, கம்பி வலைகள், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT