Published : 11 Oct 2024 07:29 AM
Last Updated : 11 Oct 2024 07:29 AM
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியைச் சேர்ந்த மலையாண்டி மகள் மோனிஷா (20), அங்குள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த உறவினர் ராமகிருஷ்ணனின் மகன் ஆகாஷும் (21) காதலித்து வந்தனர். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆகாஷ் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை மதகுபட்டி வந்த ஆகாஷ், மோனிஷா வீட்டுக்குச் சென்று, மோனிஷாவை திருமணம் செய்து வைக்குமாறு அவரது தந்தை மலையாண்டியிடம் கேட்டுள்ளார். இதற்கு மலையாண்டி மறுப்பு தெரிவித்ததால், அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் மலையாண்டி வெளியே சென்றிருந்த நிலையில், மீண்டும் மோனிஷா வீட்டுக்குச் சென்ற ஆகாஷ், தன்னுடன் வருமாறு மோனிஷாவை அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவே, அருகில் இருந்த பாட்டிலை உடைத்து அவரது கழுத்தில் குத்தினார்.
இதில் மோனிஷா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தானும் அதே பாட்டிலால் வயிற்றில் குத்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதகு பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT