Published : 12 May 2024 08:08 AM
Last Updated : 12 May 2024 08:08 AM
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் வாட்ஸ்அப்பில் பணம் கேட்ட மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,மர்ம நபர் ஒருவர் ராதாகிருஷ்ணன் பெயரில், அவரது புகைப்படத்துடன் கூடிய போலி வாட்ஸ்அப் கணக்கை தொடங்கி உள்ளார்.
அதன் மூலம், ராதாகிருஷ்ண னுக்கு வேண்டப்பட்டவர்கள் சிலருக்கு அந்த நபர் வாட்ஸ்அப் மூலம்தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அதன்படி, பணத்தை ஜிபே மூலம் தனது வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்குமாறு ஒரு செல்போன் எண்ணை வழங்கி இருக்கிறார். இதையடுத்து, சந்தேகமடைந்த அவர்கள், ராதாகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு, இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன், தான் பணம் கேட்வில்லை என்றும், போலி வாட்ஸ்அப் கணக்கில் இருந்து யாரோ மர்ம நபர் பணம்கேட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.இதுபோல், பலரிடம் வாட்ஸ்அப்பில் அந்த நபர் ராதாகிருஷ்ணன் பெயரில் பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இதுகுறித்து சென்னை காவல் ஆணையரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீஸார், அந்த போலி வாட்ஸ்அப் எண் மூலம் பணம் கேட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ராதாகிருஷ்ணன், தனது சமூக வலைதள பக்கங்களில் தனது பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கை தொடங்கி சிலர் பணம் கேட்பதாகவும், அது தான் இல்லை என்றும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT