Published : 25 Apr 2024 04:44 AM
Last Updated : 25 Apr 2024 04:44 AM

திருச்சி, தஞ்சாவூரில் இரு விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

திருச்சி/தஞ்சாவூர்: திருச்சி, தஞ்சாவூர் அருகே நேரிட்டஇரு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி கொட்டப்பட்டு வெங்டேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி(57). இவரது மனைவி விஜயலட்சுமி (51). இவர்மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர்கள் நேற்று உறவினர் கண்ணன்(47) என்பவருடன் சிவகாசியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோபி ஓட்டினார்.

திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் கல்லுப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் விஜயலட்சுமி, கண்ணன்ஆகியோர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கோபி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இருவர் உயிரிழப்பு: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை வேம்பக்குடி கீழ தெருவைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் மகன் ஜெகன் (30). அகரமாங்குடி கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் பாக்யராஜ் (39). இருவரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வடக்கு மாங்குடிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த சரக்கு வேன், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக அய்யம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x