Published : 05 Oct 2023 06:06 AM
Last Updated : 05 Oct 2023 06:06 AM

கார் மோதி பெண் படுகாயம்: கோவை விபத்து காட்சி வீடியோ வைரல்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி லீலாவதி(45). இவர், ஆர்.எஸ்.புரம் லைட்ஹவுஸ் சாலை வழியாக நேற்று முன்தினம் காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள திரையரங்கு அருகே சென்றபோது, பின்புறமாக வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லீலாவதியின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் லீலாவதி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மேற்குப்பகுதி போலீஸார் விசாரித்தனர். அதில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் அதேபகுதியைச் சேர்ந்த உத்தம்குமார்(50) எனத் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x