Published : 21 Jul 2023 04:10 AM
Last Updated : 21 Jul 2023 04:10 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் உள்ள கடையில் ஊழியர்களைத் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடை நடத்தி வருபவர் ரவி. நேற்று அதிகாலை 3 மணிக்கு கடைக்கு பைக்கில் வந்த 4 பேர், விபத்தில் காயமடைந்த தங்களது நண்பரை மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500 வேண்டுமென கேட்டனர். கடை ஊழியர்கள் நாகராஜன், சுவாமிநாதன் ஆகியோர் பணம் இல்லை எனக் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் வாளைக் காட்டி மிரட்டி இருவரையும் தாக்கி கடையைச் சேதப்படுத்தினர். இதையறிந்த மருத்துவமனை புறகாவல் நிலைய காவலர் ஒருவர் 4 பேரையும் தடுக்க வந்தார். அவரையும் வாளைக் காட்டி மிரட்டிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றனர். சிவகங்கை டவுன் எஸ்ஐ ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், 4 பேரையும் 2 மணி நேரத்தில் விரட்டிப் பிடித்தனர்.
விசாரணையில், சிவகங்கை சமத்துவபுரத்தைச் சேர்ந்த மகுடபதி (26), காமராஜர் காலனியைச் சேர்ந்த பிரவீன் (27), மணிகண்டன் (25), திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ஹரிகரன் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்து வாள், பைக்கை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT