Published : 08 Jun 2023 04:07 AM
Last Updated : 08 Jun 2023 04:07 AM

தருமபுரி அருகே வனப்பகுதியில் பெண் கொலை - போலீஸ் தீவிர விசாரணை

தருமபுரி: தருமபுரி அருகே வனப்பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி அருகே கடத்தூரான் கொட்டாய் அடுத்த நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் பாறைகளுக்கு மத்தியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவ்வழியே சென்ற அப்பகுதி மக்கள் இது குறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும், அதியமான்கோட்டை போலீஸார் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் தருமபுரி பழைய ரயில்வே லைன் பகுதியிலுள்ள கோல்டன் தெருவைச் சேர்ந்த தருமபுரி நகராட்சி கவுன்சிலர் புவனேஸ்வரனின் மகள் ஹர்ஷா (23) என தெரியவந்தது.

பி.பார்ம்., முடித்துள்ள ஹர்ஷா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பார்மஸி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே, அவர் நேற்று முன் தினம் பகலில் அல்லது மாலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரிய வருகிறது.

ஹர்ஷா கொலைக்கு காரணமானவர்கள் மற்றும் கொலைக்கான பின்னணி ஆகியவை குறித்து அதியமான்கோட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஹர்ஷாவின் செல்போனில் இறுதியாக பேசப்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை பிடித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x