“மக்​கள் என் பக்​கம், என்னை இயக்கு​வது இறைவன்​!” - ‘ஓம்’ இசை விழாவில் தனுஷ் பேச்சு

“மக்​கள் என் பக்​கம், என்னை இயக்கு​வது இறைவன்​!” - ‘ஓம்’ இசை விழாவில் தனுஷ் பேச்சு
Updated on: 
1 min read

ராஜ்குமார் பெரியசாமி இயக்​கத்​தில் தனுஷ் நடித்​துள்ள திரைப்படம் ‘ஓம்’. இதில் மம்​மூட்டி, நஸ்ருதீன் ஷா, இந்​திரன்ஸ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்​தின் பாடல் வெளியீட்டு விழா சென்​னை​யில் நேற்று முன் தினம் நடைபெற்றது. மம்​மூட்டி உள்பட படக்​குழு​வினர் கலந்​து​கொண்டனர்.

விழா​வில் ஏராளமான ரசிகர்​கள் திரண்​ட​தால் கூட்ட நெரிசல் ஏற்பட்​டது. தனுஷ் அரசி​யலுக்கு வர இருப்​ப​தாகக் கூறப்​படும் நிலை​யில் அரசி​யல் கட்​சிக்கு இணை​யாக தனுஷின் பிரம்மாண்ட கட்​அவுட்​களும் பேனர்​களும் விழா நடை​பெறும் இடத்​துக்கு அருகே வைக்​கப்​பட்​டிருந்​தன.

விழா​வில் தனுஷ் பேசும்​போது கூறிய​தாவது: என் ரசிகர்​கள், நான் சொன்​னேன் என்​ப​தற்​காகப் பல ஊர்​களில் நலத்​திட்ட உதவிகளைச் செய்து வரு​கிறார்​கள். அதைப் பார்க்​கும்​போது எனக்கு பெரு​மையாக இருக்​கிறது.

என்​னைக் குறைத்து எடை போட்டு, மட்​டம் தட்டி, நான் நடிக்க வந்​ததில் இருந்து இப்​போது​வரை அப்​படியே பண்​ணிக் கொண்​டிருக்​கிறார்​கள். என்னை அவர்​கள் குறைத்து எடை போடப் போட, மட்​டம் தட்​டத் தட்ட, அவர்​களுக்கே தெரியாமல் என்னை ஊக்​கப்​படுத்​திக் கொண்டிருக்​கிறார்​கள். யாரும் எதிர்​பார்க்​காத நேரத்தில் திடீரென்று மேலே வந்து ஒரு அடி அடித்​தால் அதில் கிக் இருக்கிறது.

எப்​படி காற்​றுள்ள பந்​தைத் தண்​ணீருக்​குள் அமுக்கி வைக்க முடியாதோ, எப்​படி உங்​கள் மொபைல் பாஸ்​வேர்டை உங்​கள் தோழி​யிடம் ரொம்ப நாள் மறைக்க முடி​யாதோ, இறையருள் இருக்​கும் வரைக்​கும் கடினமான உழைப்பு இருக்​கும் வரைக்​கும் என் ரசிகர்​கள் ஒவ்​வொரு​வரும் ஒரு தீப்​பந்​த​மாக எனக்கு வழிகாட்டு​கிற வரைக்​கும் என் வழி​யில் அமைதி​யாகப் போய்க் கொண்​டிருப்​பேன். எது செய்​தா​லும் நான் என் மனசாட்​சிக்கு நியாய​மாகச் செய்​வேன்.

ஒரு போதும் உங்​களைத் தலைகுனிய வைக்​க​மாட்​டேன். சமீபகாலமாக என்னை, அவர் இயக்​கு​கிறார், இவர் இயக்குகிறார் என்று சொல்​லிக்கொண்​டிருக்​கிறார்​கள். என்னை யாரும் இயக்கவில்லை. என்னை இயக்​கு​வது இறைவன்​தான். என் பின்னால் இருப்​பது ரசிகர்​கள். மக்​கள் என் பக்​கம். இவ்​வாறு தனுஷ் பேசினார்.

பின்​னர் அவரிடம் கேட்​கப்​பட்ட கேள்​வி​களுக்​குப் பதில் சொல்லும்போது, “தமிழ்​நாடு முழு​வதும் ஏ.சி. டியூசன் சென்​டர்கள் தொடங்​கப்​படும். இன்​னும் சில நாட்​களில் சென்​னை​யில் 3 இடங்களி​லும், கன்​னியாகுமரி​யில் ஓர் இடத்​திலும் தொடங்​கப்​பட இருக்​கிறது. அரசி​யல் பற்றி கேட்​கிறார்​கள். எல்​லோருக்​கும் கண்டிப்​பாகத் தெரிய வேண்​டிய, அறிய வேண்​டிய உணர்வு அரசியல்” என்​றார்.

“மக்​கள் என் பக்​கம், என்னை இயக்கு​வது இறைவன்​!” - ‘ஓம்’ இசை விழாவில் தனுஷ் பேச்சு
தீபாவளி: சொந்த ஊருக்கு செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்

X