சந்திரோதயம்: எம்​.ஜி.ஆர் செய்தியாள​ராக நடித்த திரைப்படம்

சந்​திரோத​யம்

சந்​திரோத​யம்

Updated on
2 min read

ஹாலிவுட்​டில், பிராங்க் காப்ரா இயக்​கத்​தில் 1934-ல் வெளி​யாகி 5 ஆஸ்​கர் விருதுகளை அள்​ளிய திரைப்​படம், ‘இட் ஹேப்​பண்ட் ஒன் நைட்’. கிளார்க் கேபிள்​, கிளாடெட் கோல்​பர்ட் நடித்து சூப்​பர் ஹிட்டான இப்​படம் உலகம் முழு​வதும் பல்​வேறு மொழிகளில் ரீமேக் செய்​யப்​பட்​டது.

இக்​கதை​யின் பாதிப்​பிலும் பல்​வேறு மொழிகளில் திரைப்​படங்கள் உரு​வாகின. பின்​னர் இதே கதையை மைய​மாக வைத்து ‘ரோமன் ஹாலிடே’ என்ற திரைப்​ பட​மும் ஹாலிவுட்​டில் உருவானது. இந்​தி​யில், தேவ் ஆனந்த், மது​பாலா நடிப்​பில் ‘நடான்’, ஏவி.எம் தயாரிப்​பில் ராஜ் கபூர், நர்​கிஸ் நடிப்​பில் ‘சோரி சோரி’ உள்​ளிட்ட சில திரைப்​படங்​கள் இக்​கதை​யின் பாதிப்​பில் உருவானது​ தான்.

இதே கதை​யில் தமிழில் உரு​வான திரைப்​படம், ‘சந்​திரோத​யம்’. எம்​ஜிஆர், ஜெயலலிதா முதன்​மைப் பாத்​திரங்​களில் நடித்த இப்படத்​தில், எம்​.ஆர்​.​ரா​தா, நம்​பி​யார், பண்​டரி​ பாய், அசோகன், நாகேஷ், மனோர​மா, பார​தி, எஸ்​.என்​.லட்​சுமி, ‘குலதெய்​வம்’ ராஜகோ​பால் என பலர் நடித்​தனர்.

‘பணத்​ தோட்​டம்’, ‘கலங்​கரை விளக்​கம்’ படங்​களுக்​குப் பிறகு கே.சங்​கர், எம்​.ஜி.ஆரை, மீண்​டும் இயக்​கிய படம் இது. சரவணா பிலிம்ஸ் சார்​பில் ஜி.என்​.வேலுமணி தயாரித்த இந்​தப் படத்​துக்கு தம்பு (சி.​வி.​ராமகிருஷ்ணன்) ஒளிப்​ப​திவு செய்​தார்.

செல்​வ​மணி எஸ்​டேட்​டின் வாரி​சான தேவி (ஜெயலலி​தா), தன் நிச்​சய​தார்த்​தத்​துக்கு முதல் நாள் வீட்டை விட்டு ஓடி​விடு​கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்​படுத்த, அவருடைய தந்தை ஜமீன்​தார் பொன்​னம்​பலத்​துக்கு (அசோகன்) அவமான​மாகிறது. வீட்டைவிட்டு வெளி​யேறி, தனி​யாகத் தவிக்​கும் தேவியை, ரவுடிகளிட​மிருந்து நாளிதழ் நிருப​ரான சந்​திரன் (எம்​ஜிஆர்) காப்​பாற்​றுகிறார். தன் வீட்​டிலேயே அவருக்கு அடைக்​கலம் தரு​கிறார்.

சந்​திரன், ‘தினக்​கவர்ச்​சி’ என்ற நாளிதழில் நிருப​ராகப் பணிபுரிவது அவருக்​குத் தெரிய​வரு​கிறது. அந்த நாளிதழை நடத்தி வரும் துரியோதனன் (எம்​.ஆர்​.​ரா​தா), செய்​தி​களைப் பரபரப்​பாக்​கு​வ​தில் மட்​டுமே குறி​யாக இருக்​கிறார். சந்​திரன் தன் முதலா​ளி​யின் இந்த போக்கை அடிக்​கடி எதிர்க்​கிறார். அதே நாளிதழின் புகைப்​படக் கலைஞர் ஆழ்​வார் (நாகேஷ்), சந்திரனுக்கு நெருங்​கிய நண்​ப​ராக இருந்​து, பல நேரங்​களில் உதவி செய்​கிறார்.

இறு​தி​யில், குடும்​பத்​தா​ரின் சம்​மதத்​தோடு சந்​திரன், தேவியை எப்​படித் திருமணம் செய்து கொள்​கிறார் என்​பது கதை. துரியோதனன் தன் தவறுகளுக்​காக வருந்​தி, சந்​திரனிடம் புதிய நாளிதழைத் தொடங்​கச் சொல்​கிறார். அதற்கு ஒரு பெயரை​யும் தேர்ந்​தெடுக்​கச் சொல்​கிறார். அந்​தப் பெயர் சந்​திரோத​யம்! இப்படத்​துக்கு எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் இசையமைத்​தார்.

புதி​யதோர் உலகம் செய்​வோம் என்ற பார​தி​தாசனின் பாடலைத் தவிர மற்​றப்​பாடல்​களை வாலி எழு​தி​னார். ‘புத்​தன் ஏசு காந்தி பிறந்​தது பூமி​யில் எதற்​காக ?’, ‘கெட்டி மேளம் கொட்​டுற கல்யாணம்’, ‘காசிக்கு போகும் சன்​னி​யாசி’, ‘எங்​கிருந்தோ ஆசைகள்​...’, ‘சந்​திரோத​யம் ஒரு பெண்​ணானதோ...’ என அனைத்துப் பாடல்​களும் வரவேற்​பைப் பெற்​றன. இப்​போது வரை பலரின் பேவரைட் லிஸ்ட்​டில் இப்​பாடல்​கள் இருக்​கின்​றன.

இதில் ‘புத்​தன் ஏசு காந்தி பிறந்​தது’ பாடலில் எம்​ஜிஆருடன் குழந்தைகள் சிலரும் மழை​யில் நனைந்​து​ கொண்டு உடன் வர வேண்​டும். செயற்கை மழை​யில் பாடல் படமாக்​கப்​பட்​டது. ஆனால், குழந்​தைகளுக்​குப் பாதிப்பு வந்​து​விடக் கூடாது என்பதற்காக, அதை வெந்நீர் மழை​யாக மாற்ற வைத்​தா​ராம் எம்.ஜி.ஆர். இதை அந்​தக் காலத்​தில் பெரு​மை​யாக பேசுவார்​கள்.

இப்​படத்​தின் கிளை​மாக்ஸ் சண்​டைக் காட்​சி​யில் எம்​.ஜி.ஆரும் நம்​பி​யாரும் மோது​வார்​கள். உடைந்த, உருண்​டோடும் ‘டேபிள் லேம்​’பை மட்​டுமே வைத்​து, அதன் வழி நிழல்​களை​யும் ஒளியையும் பயன்​படுத்தி அக்​காட்​சியை அரு​மை​யாக படமாக்கி இருப்​பார் தம்​பு. டெக்னாலஜி அதி​கம் வளராத அந்​தக் காலத்​தில் இந்த லைட்​டிங் உத்தி பரபரப்​பாகப் பேசப்​பட்​டது.

இப்​படம் 1966-ம் ஆண்டு இதே நாளில் (மே 27) வெளி​யானது. இன்றோடு 60 ஆண்​டு​களை நிறைவு செய்​தா​லும் இனிமை​யான பாடல்​கள், நாகேஷின் நகைச்​சுவை, எம்​.ஜி.ஆர், எம்​.ஆர்​.​ரா​தா, ஜெயலலி​தா ஆகியோரின்​ நடிப்​பு ஆகிய​வற்​றால்​ இப்​படம்​ இன்றும்​ பேசப்​படுவ​தாக இருக்கிறது.

<div class="paragraphs"><p>சந்​திரோத​யம்</p></div>
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in