“கவனத்தை ஈர்ப்​ப​தற்​காக மட்டுமே நடிக்க மாட்​டேன்” - கயாடு லோஹர் உறுதி

“கவனத்தை ஈர்ப்​ப​தற்​காக மட்டுமே நடிக்க மாட்​டேன்” - கயாடு லோஹர் உறுதி
Updated on
1 min read

கயாடு லோஹர் நடித்​துள்ள ‘ஐ அம் கேம்’, ‘இம்மார்டல்’ ஆகிய படங்​கள் அடுத்​தடுத்த நாட்​களில் வெளி​யாகி​யுள்​ளன. துல்​கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்​தின் புரமோஷன் நிகழ்ச்​சிகளில் கலந்​து​கொண்ட அவர், ‘இம்மார்டல்’ படத்​தின் விளம்​பரப் பணிகளில் பெரி​தாகக் கலந்​து​கொள்​ள​வில்லை என்று சமூக வலை​தளங்​களில் சர்ச்சை எழுந்​தது. அது குறித்து காயடு லோஹர் விளக்​கம் அளித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “ஐ அம் கேம்’ பட விளம்​பரத்​துக்​காக ஒரு நாள் மட்​டுமே கால்​ஷீட் கொடுக்க முடிந்​தது. அதனால் அதில் பங்கேற்றேன். ‘இம்​மார்​டல்’ குழு​வினரிடம் அந்த தேதி இல்​லை. சூர்​யா​வுடன் ஒரு படத்​தின் படப்​பிடிப்​பில் பங்​கேற்​ற​தால் அதன் புரமோஷனில் பங்​கேற்க முடிய​வில்​லை. கிளாம​ராக நடிப்​பது பற்றி கேட்​கிறார்​கள்.

பெண்​களைத் தேவையற்ற முறை​யில் போகப் பொருளாகச் சித்தரிப்​பதை நான் ஒரு​போதும் ஏற்​ப​தில்​லை. ஆனால், கதைக்கும் கதா​பாத்​திரத்​துக்​கும் தேவை என்​றால் அந்​தக் கதாபாத்​திரம் நம்​பக​மானது என நான் கரு​தி​னால், குறிப்​பிட்ட எல்லை வரை நடிப்பேன்.

மற்​றபடி, கவனத்தை ஈர்ப்​ப​தற்​காக மட்டும் அப்​படிப்​பட்ட விஷ​யங்​களைச் செய்​வ​தில் விருப்பமில்லை. அது சில நேரங்களில் இன்​ஸ்​டாகி​ராமில் ட்ரெண்ட் ஆகலாம், ஆனால் அதில் எனக்​குச் சிறிதும் ஆர்வமில்லை. அப்​படிப்​பட்ட படங்களுக்கு ஒரு​போதும் சரி என்று சொல்​ல​மாட்​டேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

“கவனத்தை ஈர்ப்​ப​தற்​காக மட்டுமே நடிக்க மாட்​டேன்” - கயாடு லோஹர் உறுதி
‘டோரதி’ பார்த்துவிட்டு இளையராஜா சொன்ன யோசனை: கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சிப் பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in