‘ஹலோ மிஸ்’ அறிமுகம்: கதை, நடிப்பு, இயக்கம்!

‘ஹலோ மிஸ்’ அறிமுகம்: கதை, நடிப்பு, இயக்கம்!
Updated on
1 min read

காதல் கதைகளை மட்டும் பார்வையாளர்கள் எப்போதும் வெறுப்பதில்லை, அதைப் படைப்பவர்களுக்கும் சலிப்பதில்லை. இப்போது ‘ஹலோ மிஸ்’ என்கிற ஜென் ஸீ காதல் படத்தை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார் சாய்ரா.

நமஹா மூவி மேக்கர்ஸ் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரித்துவரும் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிஸ்மி.

இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், ஜானகி சுரேஷ், கு.ஞானசம்பந்தன், மாறன் உள்படப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புனே திரைப்படக் கல்லூரியில் பயின்று, மலையாளப் படங்களுக்கு இசை, ஒலி வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துவரும் பிரின்ஸ் ஜார்ஜ் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார்.

விவேக், தாமரை, விவேகா பாடல்களை எழுதியிருக்கின்றனர். சென்னை, திருச்சியில் நடக்கும் இந்தக் காதல் கதையில் இந்த இரண்டு ஊர்களும் கதாபாத்திரங்கள் போல் வரும் என்கிறார் இயக்குநர்.

‘ஹலோ மிஸ்’ அறிமுகம்: கதை, நடிப்பு, இயக்கம்!
வாழ வைக்கும் சென்னைக்கு ஜே..! | சென்னை 387

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in