அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்.25-ல் ரிலீஸ்

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்.25-ல் ரிலீஸ்
Updated on
1 min read

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அன்பில் அவன்’ படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐங்கரன் இன்டர்நேஷனல் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ‘அளவு கடந்த அன்பு, அதிகமான உற்சாகம். ‘அன்பில் அவன்’ படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது.

ஆர்.கார்த்திகேயனின் இயக்கத்தில் அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடித்திருக்கும் படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தில் இவர்களுடன் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இருக்கிறார். கெளதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்துக்கு, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு பணியை மேற்கொண்டு இருக்கிறார். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்.25-ல் ரிலீஸ்
‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படம் திரையிடல் தொடங்கியது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in