குடும்​பத்தை மைய​மாகக் கொண்ட கதை​யில் கவின்

குடும்​பத்தை மைய​மாகக் கொண்ட கதை​யில் கவின்
Updated on
1 min read

நடிகர் கவின் “ஹாய்” என்ற படத்​தில் நயன்​தா​ரா​வுடன் நடித்துள்ளார். விஷ்ணு எடவன் இயக்​கும் இதில் கே.​பாக்​ய​ராஜ், பிரபு, ராதிகா, சத்​யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். இப்​படத்தை அடுத்து கவினின் 11-வது திரைப்​படத்தை பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய​வர்​தனன் தயாரிக்​கிறார்.

இப்​படத்தை ‘பார்க்​கிங்’ இயக்​குநர் ராம்​கு​மார் பால​கிருஷ்ணனிடம் அசோசி​யேட்​டாக பணி​யாற்​றிய பிர​வீன் பரம சிவன் இயக்​கு​கிறார்.

காதல், நகைச்​சுவை என பல்​வேறு கதாபாத்திரங்​களில் நடித்​துள்ள கவின் இப்​படத்​தில் குடும்​பத்தை மைய​மாகக் கொண்ட கதை​யில் நடிக்​கிறார்.

சமகால வாழ்க்கை முறையை​யும், உறவு​களின் நுணுக்கங்களையும் பேசும் இப்​படம், எல்லா தரப்​பினரை​யும் கவரும் வகை​யில் கமர்​ஷியல் அம்​சங்​களு​டன் உரு​வாகிறது. இதன் படப்​பிடிப்பு மே மாத இறு​தி​யில் தொடங்​கு​கிறது. மற்ற நடிகர்​கள், தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் பற்​றிய அறி​விப்பு விரைவில் வெளி​யாகும் படக்​குழு அறி​வித்​துள்​ளது.

குடும்​பத்தை மைய​மாகக் கொண்ட கதை​யில் கவின்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in