Last Updated : 06 Sep, 2017 04:03 PM

 

Published : 06 Sep 2017 04:03 PM
Last Updated : 06 Sep 2017 04:03 PM

தாய்லாந்தில் கும்கி 2 படப்பிடிப்பு தொடக்கம்

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் 'கும்கி 2' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று (செப்டம்பர் 6) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

'கும்கி 2' படத்துக்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார் பிரபு சாலமன். இதற்காக தனது படக்குழுவை மாற்றினார். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவாளராக சுகுமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

'கும்கி' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். அதற்கு பிறகு பிரபுசாலமன் - சுகுமார் இருவரும் இணைந்து பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'கும்கி 2' படத்துக்காக படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் தீவிரம் காட்டியது படக்குழு.

இதன் நாயகனாக லிங்குசாமியின் மருமகன் மதியும், நாயகியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் நடித்து வருகிறார்கள். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான 'ரா..ரா.. ராஜசேகர்' படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டியவர் மதி. ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், 'கும்கி 2'வில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.

தாய்லாந்து நிறைய யானைகள் உலவும் இடம் என்பதால், அங்கு படத்தின் பிரதான காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார் பிரபுசாலமன். இப்படத்தை பென் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x