Last Updated : 29 Sep, 2017 03:35 PM

 

Published : 29 Sep 2017 03:35 PM
Last Updated : 29 Sep 2017 03:35 PM

ஸ்பைடர் படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு

மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகியுள்ள 'ஸ்பைடர்' படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, எஸ்.ஜே.சூர்யா, பரத், ரகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஸ்பைடர்'. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். தாகூர் மது தயாரித்திருக்கும் படத்தை தமிழகத்தில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் பிரத்யேக காட்சி ரஜினிக்கு திரையிடப்பட்டது. தற்போது ’ஸ்பைடர்’ குறித்து ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

படம் மிகப் பிரமாதமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளோடு, படத்தில் வலுவான கருத்தும் இருக்கிறது. இந்தக் கதையை ஏ.ஆர். முருகதாஸ் நன்றாக கையாண்டுள்ளார். மகேஷ் பாபு சிறப்பாக நடித்துள்ளார். ஸ்பைடர் படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்!

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x