Last Updated : 13 Sep, 2017 02:54 PM

 

Published : 13 Sep 2017 02:54 PM
Last Updated : 13 Sep 2017 02:54 PM

இறுதியாக தெறி உரிமையைக் கைப்பற்றியது சன் டி.வி

நீண்ட நாட்களாக விற்கப்படாமல் இருந்த 'தெறி' தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. இதன் தொலைக்காட்சி உரிமைக்கு அதிக விலை கோரியதால் விற்கப்படாமல் இருந்தது. அப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

தற்போது தயாரிப்பாளர் தாணுவிடமிருந்து 'வேலையில்லா பட்டதாரி 2' மற்றும் 'தெறி' ஆகிய படங்களின் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருக்கிறது.

மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் 'ஸ்பைடர்' படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் தொலைக்காட்சி பெரும் விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இவைதவிர 'விவேகம்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'சத்யா', 'அறம்', 'குலேபகாவலி', 'சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்' மற்றும் 'சிவகார்த்திகேயன் - பொன்ராம்' ஆகிய படங்களின் உரிமையையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x