Last Updated : 01 Sep, 2017 05:48 PM

 

Published : 01 Sep 2017 05:48 PM
Last Updated : 01 Sep 2017 05:48 PM

செப்டம்பர் 29-ம் தேதி வெளியீட்டில் இணைந்தது ஹர ஹர மஹாதேவகி

தீபாவளி வெளியீடாக இருந்த 'ஹர ஹர மஹாதேவகி', தற்போது செப்டம்பர் 29-ம் தேதியே வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி, அதற்கு முன்னதாக செப்டம்பர் 29-ம் தேதியே 'ஹர ஹர மஹாதேவகி' வெளியாகும் என படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளது. தீபாவளி தினத்தை முன்வைத்து 'மெர்சல்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'சொல்லிவிடவா' உள்ளிட்ட பல படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்திருப்பதே இதற்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. சமீபத்தில் அனிருத் வெளியிட்ட இதன் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' பாணியில் முழுக்க இளைஞர்களைக் கவரும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படப்பிடிப்புக்கு முன்பே கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 'ஹர ஹர மஹாதேவகி' வாக்கியத்தை படக்குழு படத்தின் பெயராக சூட்டியிருக்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x