Published : 08 Apr 2023 08:50 AM
Last Updated : 08 Apr 2023 08:50 AM
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், 'இந்தியன் 2'. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புக்காக, கடந்த 1ம் தேதி தைவான் நாட்டுக்குச் சென்றனர். அங்கு தைபே நகரில் நடந்தப் படப்பிடிப்பில் கமல்ஹாசன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் மார்காஸ் லேன்கேஸ்டரும் (Margaux Lancaster) கலந்துகொண்டார்.
இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள மார்காஸ் லேன்கேஸ்டர், “தைபே நகரில் உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. மே மாதம் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார். தைபே நகரில் படப்பிடிப்பை முடித்த ‘இந்தியன் 2’ குழுவினர் அடுத்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்குச் சென்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT