Last Updated : 28 Sep, 2017 04:00 PM

 

Published : 28 Sep 2017 04:00 PM
Last Updated : 28 Sep 2017 04:00 PM

படப்பிடிப்பு துவங்கும் முன்பே விற்பனையான ஜுங்கா

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'ஜுங்கா' படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விற்பனையாகியுள்ளது.

'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு ஆயத்தமாகி வருகிறது படக்குழு. சுமார் 20 கோடி பொருசெலவில் உருவாகும் இப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பிரதி மூலமாக தயாரிப்பு, வெளியீட்டு உரிமையை அருண்பாண்டியனின் ஏ & பி குரூப் நிறுவனம் கைப்பற்றிருக்கிறது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

கோகுல் இயக்கத்தில் உருவாகும் 'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், யோகி பாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார். 'ஜுங்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x