சிவகார்த்தியேன் படக்குழுவுக்கு நடனக் கலைஞர்கள் நன்றி

சிவகார்த்தியேன் படக்குழுவுக்கு நடனக் கலைஞர்கள் நன்றி
Updated on
1 min read

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம்,'மாவீரன்'. இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர்.

‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாடலான, 'சீன் ஆ சீன் ஆ' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் பாடலில் 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக, நடன கலைஞர்கள் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. நடன கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சின்னி பிரகாஷ், பாபு, மாரி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின், தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரைப் பாராட்டியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in