Last Updated : 24 May, 2017 02:32 PM

 

Published : 24 May 2017 02:32 PM
Last Updated : 24 May 2017 02:32 PM

சத்யராஜ் ஃபேஸ்புக் பக்க சர்ச்சை: சிபிராஜ் விளக்கம்

சத்யராஜ் பெயரில் போலி ஃபேஸ்புக் பக்க சர்ச்சை தொடர்பாக நடிகரும் அவரது மகனுமான சிபிராஜ் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான புகைப்படம் எடுக்கும் நிகழ்வில், "குடிப்பழக்கம், மதுப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். குடும்பத்தை கவனியுங்கள்" என்று பேசினார் ரஜினி.

ரஜினி கூறிய கருத்தை வைத்துக் கொண்டு, ’புரட்சித்தமிழன் சத்யராஜ்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக கிண்டல் செய்தார்கள். இதனால் ரஜினியின் பேச்சை சத்யராஜ் கிண்டல் செய்கிறார் என்று தகவல் வெளியானது.

இதனை பலரும் ட்விட்டர் தளத்திலிருந்து சிபிராஜின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அதற்கு "அப்பா எந்தவொரு சமூகவலைதளத்திலும் இல்லை. இந்த போலியான பக்கத்தில், அப்பா பெயரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆகையால் அனைவருமே ஃபேஸ்புக்கில் புகார் தெரிவித்து இப்பக்கத்தை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிலளித்துள்ளார் சத்யராஜ். இப்போலியான பக்கத்துக்கு குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிராஜ் மற்றும் குஷ்பு இருவரின் கடும் சாடலைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலிருந்து அப்பக்கம் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x