Published : 13 Nov 2022 06:56 PM
Last Updated : 13 Nov 2022 06:56 PM
தனது திருமண நிகழ்வை ஒடிடி-யில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ள நடிகை ஹன்சிகா, இதற்கான ஒளிபரப்பு உரிமையை பிரபல தனியார் ஓடிடி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்திப் படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஹன்சிகா, தமிழில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய உள்ளார்.
இவர்களது திருமணம் டிசம்பர் 4-ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெற உள்ளதாகச் சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஹன்சிகா சமீபத்தில் வெளியிட்டிருந்தார். தனது தோழி ரங்கி என்பவரின் கணவரான சோஹேல் கதுரியாவைத் தான் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள உள்ளார். ரிங்கிக்கும், சோஹேல் கதுரியாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏற்கெனவே பிரிந்து விட்டனர். இந்நிலையில், தனது திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்றுக்கு வழங்க ஹன்சிகா, சோஹேல் ஜோடி முடிவு செய்து ஒப்பந்தம் நிறைவேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT