Last Updated : 26 Nov, 2016 02:15 PM

 

Published : 26 Nov 2016 02:15 PM
Last Updated : 26 Nov 2016 02:15 PM

சதுரங்க வேட்டை 2 அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் பூர்ணா

நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'சதுரங்க வேட்டை 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பூர்ணா.

'சதுரங்க வேட்டை' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் முடித்து கொடுத்துவிட்டார் 'சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத்.

இக்கதையின் நாயகனாக அரவிந்த்சாமி நடித்து வருகிறார். த்ரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மனோபாலா தயாரித்து வரும் இப்படத்தை 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கி வருகிறார்.

தற்போதுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எப்படி நகர வாழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வினோத்.

இப்படத்தில் அரவிந்த்சாமி - த்ரிஷா கணவன், மனைவியாக நடிக்கவில்லை. இதில் அரவிந்த்சாமி மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பூர்ணா. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை படுவேகமாக நடத்தி வருகிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x