Published : 18 Nov 2016 06:58 PM
Last Updated : 18 Nov 2016 06:58 PM

நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம்: யுவன் தயாரிக்கிறார்

சக்ரி டோலட்டி இயக்கும் 'கொலையுதிர் காலம்' படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் மூலம் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் 'டோரா', அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரு படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

தற்போது கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு 'அறம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன் தாரா நடிக்கும் படத்துக்கு 'கொலையுதிர் காலம்' என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கிறார்.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கொலையுதிர் காலம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

சக்ரி டோலட்டி கமல் நடிப்பில் வெளியான உன்னைப்போல் ஒருவன், அஜித் நடிப்பில் வெளியான பில்லா2 படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x