Last Updated : 02 May, 2016 02:30 PM

 

Published : 02 May 2016 02:30 PM
Last Updated : 02 May 2016 02:30 PM

கதைத் தெரிவில் கவனம்: உதயநிதிக்கு ரஜினி யோசனை

'மனிதன்' மாதிரியான கதைக்களங்களில் நடிக்குமாறு உதயநிதிக்கு ரஜினி யோசனை தெரிவித்தார்.

அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'மனிதன்' இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தனது படத்தின் தலைப்போடு வெளியாகி இருக்கும் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருப்பதால், 'மனிதன்' படத்தைப் பார்க்க விரும்பினார் ரஜினி. இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரத்யேகமாக படம் திரையிடப்பட்டது.

படம் பார்த்து முடிந்தவுடன் உதயநிதிக்கு போன் பண்ணிய ரஜினி "சூப்பராக இருந்தது. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாத்திரமும் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார்கள். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து உதயநிதி "உங்களுடைய படத்தின் தலைப்பு. நல்ல படமாக அமைந்துவிட வேண்டும் என்று கொஞ்சம் பயம் இருந்தது" என்று கூற, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நல்ல கதை. தொடர்ச்சியாக இதே மாதிரியான படங்களில் நடியுங்கள். உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் ரஜினி. ரஜினியின் வாழ்த்தால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.

ஸ்டாலின் வாழ்த்து

கோயம்புத்தூருக்கு பிரச்சாரத்திற்கு முன்பு தனது அப்பாவிற்கு 'மனிதன்' படத்தைத் திரையிட்டு காட்டினார் உதயநிதி. ஸ்டாலின் படம் முடிந்தவுடன் உதயநிதியை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார். இந்த தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு படம் பண்ணி பெருமைப்படுத்தி இருக்கிறாய் என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x