Published : 07 Mar 2020 06:06 PM
Last Updated : 07 Mar 2020 06:06 PM
பெண் குழந்தைக்குத் தந்தையாகி இருப்பதாக நடிகரும் முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரியோ தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வருகிறார் ரியோ. மேலும் சில நாடகங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிய அந்தப் படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ரியோவின் மனைவியான ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
தற்போது தனக்கு மகள் பிறந்திருப்பதாகவும் தாயும், சேயும் நலம் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரியோ. அவருக்குத் தொலைக்காட்சி நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தனது அடுத்த படமாக, பத்ரி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தில் நடித்துள்ளார் ரியோ. அந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT