Published : 24 Aug 2019 04:29 PM
Last Updated : 24 Aug 2019 04:29 PM

செப்.6-ம் தேதி வெளியாகிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன் மற்றும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பிலிருந்து வருகிறது. பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. மேலும், நீண்ட நாட்களாகவே இந்தப் படத்தின் மீதிருக்கும் பைனான்ஸ் பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. எதிலுமே சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களாகப் பட வெளியீட்டுக்கான பேச்சுவார்த்தையில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு பைனான்ஸ் கொடுத்தவர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் இடம்பெற்றனர். இதில் படம் வெளியீட்டுக்கு ஒரு முடிவுக்கு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட வெளியீடு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதைப் போலவே, 'எனை நோக்கி பாயும் தோட்டா' அப்டேட் மாலை 3:30 மணிக்கு எனப் படக்குழு அறிவித்தது. சரியாக 3:30 மணிக்கு யாரும் எதிர்பாராத வண்ணம் படத்தின் புதிய ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இதன் முடிவில் 'செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு' என்று அறிவித்துள்ளது படக்குழு.

மேலும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய ட்ரெய்லருக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் புதிய ட்ரெய்லர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x