Published : 02 Aug 2019 08:50 AM
Last Updated : 02 Aug 2019 08:50 AM

சூப்பர் சிங்கரில் ‘காதல் தோல்வி’

மாகாபா, பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘சூப்பர் சிங்கர் சீசன் - 7’ நிகழ்ச்சியில் இந்த வாரம் மசாலா பட சுற்று வழியே பாடகர்களும், நடுவர் குழுவினரும் வித்தியாசமான தீம்களால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த உள்ளனர்.

இதுகுறித்து சேனல் தரப்பில் கேட்டபோது, ‘‘கதாநாயகன் அறிமுகம், சென்டிமென்ட், காதல், நகைச்சுவை என ஒரு மசாலா படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த சனி, ஞாயிறு சுற்றுகளில் இருக்கும். பாடகர்கள் உன்னிகிருஷ்ணன் அணியினரும், பென்னி தயாள் அணியினரும் மிகவும் கலகலப்பாக இந்த வாரம் பல சுற்றுகளை அரங்கேற்ற உள்ளனர். இதில் தொகுப்பாளர்கள் மாகாபா ஆனந்த், பிரியங்கா இருவரும் மசாலா படத்தின் இயக்குநர்களாகவும், பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட நடுவர்கள் தயாரிப்பாளர்கள் என்ற பாணியிலும் இந்த சுற்றுகள் நடக்கின்றன.

இரண்டு நாள் சுற்றுகளின் முடிவில், ‘காதல் தோல்வி’ என்ற சுற்று மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. முடிவில் வெற்றி பெறும் அணியினர், தொகுப்பாளர்கள் மாகாபா.ஆனந்த், பிரியங்கா இயக்கத்தில் படம் எடுக்கப்போகிறார்கள் என்கிற காமெடியான கலகலப்போடு சுற்று நிறைவு பெறும்’’ என்றனர்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x