Published : 02 Aug 2019 08:48 AM
Last Updated : 02 Aug 2019 08:48 AM

பல் மருத்துவரின் ‘உலகம்’

மூன் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘உலகம் 360 டிகிரி’. இதை  தொகுத்து வழங்கும் ஆனி (Annie) ஒரு பல்மருத்துவரும்கூட.

‘‘மூன் தொலைக்காட்சியில் ‘உலகம் 360 டிகிரி’, ‘ஃப்ரீயா விடு மாமே’ என இரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன். சின்ன வயதில் இருந்தே தொகுப்பாளினி என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். நான் பிளஸ் 2 முடிச்சதும் வீட்டில் பல் மருத்துவம் படிக்க சேர்த்துவிட்டாங்க. மக்களுக்கு சேவை செய்வது எனக்கும் பிடித்தமான விஷயம் என்பதால் படிப்பில் மூழ்கிட்டேன். ஆனாலும், சேனல் தொகுப்பாளினி ஆசையும் மனசுக்குள்ள ஒரு பக்கம் அப்படியே இருந்தது. கல்லூரிப் படிப்பை முடிச்சதும், மூன் தொலைக்காட்சிக்கு ஓடி வந்துட்டேன். இப்போ ஒரு பக்கம் தொகுப்பாளினி, இன்னொரு பக்கம் பல் டாக்டர் என இரு பணிகளும் அழகாக நகர்கின்றன.
‘எப்படி இரண்டையும் சமாளிக்கிறே?’ என்று தோழிகள் கேட்குறாங்க. கடந்த ஒரு வருஷமா எந்த பிரச்சினையும் இல்லாம, இரண்டு வேலைகளையும் சமத்தா செய்றதை நினைச்சா, எனக்கே பெருமையா இருக்கு. அதிலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள இசைத் திருவிழா, உணவுத் திருவிழா, அருங்காட்சியகம் சார்ந்த தகவல்கள் நிறைந்த ‘உலகம் 360 டிகிரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தனி உற்சாகமா இருக்கு’’ என்கிறார் டாக்டர் ஆனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x