திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக விக்ரமன் போட்டியின்றி தேர்வு

திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக விக்ரமன் போட்டியின்றி தேர்வு
Updated on
1 min read

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக விக்ரமன் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

இயக்குநர் சங்கத்துக்கான தேர்தல் ஜூலை 5-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 22-ம் தேதி வரைக்கும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது

இந்நிலையில் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர் மற்றும் துணைத் தலைவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமனிடன் கேட்டபோது

‘‘தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மீண்டும் தேர்வாகியுள்ளோம். செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு மட்டும் போட்டி உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் அதையும் சரிசெய்து தேர்தல் செலவை முற்றிலும் இல்லாமல் ஆக்கும் சூழலை உருவாக்கி வருகிறோம். நாங்கள் போட்டியின்றி தேர்வானது இயக்குநர் சங்கத்துக்குள் இருக்கும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கிறோம்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in