Last Updated : 01 Aug, 2017 03:35 PM

 

Published : 01 Aug 2017 03:35 PM
Last Updated : 01 Aug 2017 03:35 PM

சோலோ படத்தின் நாயகிகள் யார்?- படக்குழு அறிவிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'சோலோ' படத்தில் நாயகிகளாக நடித்திருப்பது யார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சோலோ'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது கூட இதில் நாயகிகளாக நடித்திருப்பது யார் என்று படக்குழு அறிவிக்கவில்லை.

'சோலோ' படத்தில் 4 கதைகள், 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் 3 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ளார்கள். 4 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் துல்கர் சல்மானுடன் நடித்திருக்கும் நாயகிகள் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் துல்கர் சல்மானுடன் நடித்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பரில் படத்தை வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x