Last Updated : 19 Aug, 2017 12:44 PM

 

Published : 19 Aug 2017 12:44 PM
Last Updated : 19 Aug 2017 12:44 PM

அக்டோபரில் மாரி 2 படப்பிடிப்பு துவக்கம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள 'மாரி 2' படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.

ஹாலிவுட் படப்பிடிப்பு முடிவு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் 'வடசென்னை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து 'மாரி 2' படத்தில் கவனம் செலுத்துவார் என தகவல்கள் வெளியாகின.

தற்போது 'மாரி 2' படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின் கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

நாயகி, இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x