Last Updated : 26 Aug, 2017 07:58 PM

 

Published : 26 Aug 2017 07:58 PM
Last Updated : 26 Aug 2017 07:58 PM

அமெரிக்காவில் அஜித் படங்களின் வசூலில் விவேகம் சாதனை

அமெரிக்காவில் அஜித் நடிப்பில் வெளியான படங்களில் 'விவேகம்' வசூலில் சாதனை புரிந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. தமிழகத்தில் கலவையான விமர்சனங்களுக்கு இடையே வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

தமிழகம் மட்டுமன்றி அமெரிக்காவிலும் பெரும் வசூல் செய்திருக்கிறது. 'விவேகம்' படத்தினை அமெரிக்காவில் வெளியிட்டிருக்கும் ATMUS ENTERTAINMENT தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'விவேகம்' அமெரிக்காவில் வெளியான 157 திரைகளில், 210367 டாலர்களை வசூலித்துள்ளது. இன்னும் சில திரைகளின் வசூல் வரவில்லை. 'தெறி' 131 திரைகளில் 214668டாலர்கள் வசூலித்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

இவ்வாறு ATMUS ENTERTAINMENT தெரிவித்துள்ளது. சிறிது நேரத்தில் "தற்போது 159 திரைகளில் 214176 டாலர்கள். ’தெறி’ சாதனையை நெருங்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும், தெலுங்கிலிருந்து வெளியாகியுள்ள 'அர்ஜுன் ரெட்டி' என்ற திரைப்படம் அமெரிக்காவில் பெரும் வசூலைத் தொடக்க நாளில் நிகழ்த்தியுள்ளது. இதனால் 'விவேகம்' வசூல் குறையத் தொடங்கும் என்று வியாபார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x