Last Updated : 01 Aug, 2017 03:09 PM

 

Published : 01 Aug 2017 03:09 PM
Last Updated : 01 Aug 2017 03:09 PM

யூடியூபை இன்னமும் கலக்கி வரும் ‘ஒய் திஸ் கொலவெறி’ வீடியோ: 12.5 கோடி பார்வையாளர்களை எட்டியது

'3' திரைப்படத்தில் அனிருத் இசையில் தனுஷ் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ஒய் திஸ் கொலவெறி பாடல் படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனங்களை விட்டு அகலாமல் நீங்கா இடம்பெற்று வருகிறது.

படம் ரிலீஸ் ஆகி 6 ஆண்டுகள் ஆகியும்  யூடியூபில் 12.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.

ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய ஒய் திஸ் கொலவெறி பாடலை உருவாக்கி பதிவேற்றிய வைரல் பாடலாகும் இது. இன்று வரை 12.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்தாலும் இந்தப் பாடல் மீதான கவர்ச்சி மேலும் அதிகரித்தே வருவதாக கூகுள் ஆசியா பசிபிக் பிராந்திய இயக்குநர் அஜய் வித்யாசாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்த போது இந்திய யூடியூப் பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அஜய் வித்யாசாகர், தற்போது கிராமப்புறம் மற்றும் சிறு ஊர்களிலும் யூடியூப் இன்றியமையாததாக மாறிவிட்டது என்றார்.

அதே போல் திரைப்படம் சார்பான வீடியோக்களுக்கான வரவேற்பு ஹாலிவுட்டுடன் போட்டி போடும் அளவுக்கு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. 'கபாலி', 'பாகுபலி' ஆகியவற்றின் ட்ரெய்லர், டீஸர் ஆகியவை முறையே 34 மில்லியன், 22 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்றார் வித்யாசாகர்.

மேலும் ஹாலிவுட் திரைப்படங்களை விட பல இந்தியத் திரைப்படங்களின் ஆன்லைன் ஹிட்கள் அதிகம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x