Last Updated : 19 Aug, 2017 01:24 PM

 

Published : 19 Aug 2017 01:24 PM
Last Updated : 19 Aug 2017 01:24 PM

தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்ன?

தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்னவென்று விசாரித்ததில் பல தகவல்கள் கிடைத்தன.

பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி, கே.ஆர்.முரளிதரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.பி.செளத்ரி, எடிட்டர் மோகன், எஸ்.வி.சேகர், கஸ்தூரிராஜா, ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட பல தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் யாருமே மேடையில் உட்காராமல் முன்னாள் நிர்வாகிகளையும், மூத்த தயாரிப்பாளர்களையும் மேடையில் உட்கார வைத்து, இறுதி வரைக்கும் கூட்டத்தை நின்றுக் கொண்டே நடத்தி முடித்தார்கள். இதற்கு தயாரிப்பாளர்கள் பலரும் வரவேற்பு கொடுத்தார்கள்.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விசாரித்த போது:

* தயாரிப்பாளர்கள் பெப்சி ஊழியர்கள் மட்டுமன்றி, எந்தவொரு ஊழியர்களுடன் பணிபுரியலாம் என்று தெரிவித்தார்கள்.

* தயாரிப்பாளர்களுக்கான புதிய தொழில் வழிகாட்டுதல் விஷயங்கள் அனைத்தையும் புத்தகமாக அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது

* 'வேலைக்காரன்' படத்தின் தயாரிப்பாளர் கட்டுப்பாட்டை மீறியதால், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தியதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. என்ன நடவடிக்கை என்பது விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது.

* க்யூப் பிரச்சினைக்கும், இணைய வழியாக டிக்கெட் முன்பதிவு பிரச்சினைக்கும் திரையரங்க உரிமையாளர்கள் உறுதுணையாக இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பேச்சுவார்த்தை வருமாறும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

* மொபைல் ஆப் மூலமாக குறைந்த விலையான 10 ரூபாய் மட்டுமே திரையரங்கு டிக்கெட் முன்பதிவாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 7 ரூபாய் மொபைல் ஆஃப் பராமரிப்புக்கும், 2 ரூபாய் தயாரிப்பாளர்கள் நலன் நிதிக்காகவும், 1 ரூபாய் விவசாயிகளுக்கும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

* தமிழக அரசு கண்டிப்பாக உள்ளூர் வரி விதிப்பதாக தகவல் வருவதால் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து போராட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

* நடிகர்களின் உதவியாளர்கள் சம்பளம், கேராவேன் செலவுகள் உள்ளிட்டவற்றை நடிகர் சங்கத்துடன் பேசி சரி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x