Last Updated : 30 Jul, 2017 03:17 PM

 

Published : 30 Jul 2017 03:17 PM
Last Updated : 30 Jul 2017 03:17 PM

கும்கி 2 நாயகியாக அதிதி மேனன் ஒப்பந்தம்

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'கும்கி 2' படத்தின் நாயகியாக அதிதி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'தொடரி' படத்தைத் தொடர்ந்து, 'கும்கி 2' படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குநர் பிரபு சாலமன். இதன் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்.

'கும்கி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார், இதற்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவுள்ள இப்படத்தின் நாயகியாக அதிதி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ஒப்பந்தமாவதாக இருந்தது. ஆனால், கதாபாத்திரத்துக்கு அதிதி மேனன் பொருத்தமாக இருந்ததால், தற்போது அவரை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.

முழுக்க காதல் கதையாக இருந்தாலும், கதையின் மையக்கரு யானையை வைத்திருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x