Last Updated : 29 Jul, 2017 03:48 PM

 

Published : 29 Jul 2017 03:48 PM
Last Updated : 29 Jul 2017 03:48 PM

தெலுங்கு - இந்தியில் ரீமேக் செய்யப்படும் விக்ரம் வேதா

தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

சமீபகால படங்களில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'விக்ரம் வேதா'. ரஜினி உட்பட பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.

இதனால் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினர் ஒருவரிடம் பேசிய போது, "ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே தயாரிப்பாளர் யாரிடமும் எந்தவொரு உரிமையையும் விற்கவில்லை" என்று தெரிவித்தார்.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரதா ஸ்ரீநாத், கதிர், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம் வேதா'. பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார். சஷிகாந்த் தயாரித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x