Published : 18 Jun 2017 10:18 AM
Last Updated : 18 Jun 2017 10:18 AM

அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் இணையும் நரகாசூரன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ள 'நரகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லோகோ போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

'துருவங்கள் பதினாறு' வெற்றிக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் 'நரகாசூரன்'. இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முதலில் இப்படத்தில் ஒப்பந்தமான நாக சைதன்யா விலகவே, அவருக்கு பதிலாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்று (ஜூன் 18) அரவிந்த்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, 'நரகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லோகோ போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள்.

கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு 'துருவங்கள் பதினாறு' குழுவே பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x