Last Updated : 26 Apr, 2017 01:43 PM

 

Published : 26 Apr 2017 01:43 PM
Last Updated : 26 Apr 2017 01:43 PM

’2.0’ அப்டேட்: கனடாவில் மோஷன் கேப்சர் பணிகள் தொடக்கம்

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் மோஷன் கேப்சர் பணிகள் கனடாவில் தொடங்கப்பட்டுள்ளது.

ஷங்கர் - ரஜினி இணைப்பில் '2.0' திரைப்படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி ஜனவரி 25, 2018ம் ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். வெளியீட்டு மாற்றம் தொடர்பாக லைகா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம், "தீபாவளி வெளியீட்டிலிருந்து '2.0' பின்வாங்கி, ஜனவரி 25, 2018ல் வெளியாகும். உலக தரத்தில் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவே இந்த மாற்றம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இன்னும் பல கிராபிக்ஸ் பணிகள் இருப்பதாகவும், அதற்காக தான் தாமதம் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கனடாவில் '2.0' படத்துக்கான மோஷன் கேப்சர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக 'டாவு பிலிம்ஸ்' நிறுவனம் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், மோஷன் கேப்சர் பணிகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் 'மாற்றான்' மற்றும் 'கோச்சடையான்' உள்ளிட்ட படங்களுக்கு மோஷன் கேப்சர் யுக்தியை பயன்படுத்தியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து தற்போது '2.0' படத்தின் சண்டைக்காட்சிகளுக்காகவும் இந்த யுக்தியை பயன்படுத்தியுள்ளது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x