Published : 02 Jun 2017 12:49 PM
Last Updated : 02 Jun 2017 12:49 PM

கொடி வீரன் அப்டேட்: விதார்த், பூர்ணா ஒப்பந்தம்

'கொடி வீரன்' படத்தில் விதார்த், பூர்ணா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது' படங்களை இயக்கியவர் முத்தையா. தென்மாவட்டங்களில் நிலவும் சாதியத்தையும், சாதிய பெருமைகளையும் முத்தையா படங்களில் பதிவு செய்வது வழக்கம்.

'குட்டிப்புலி' படத்தில் சசிகுமாரை இயக்கியவர் தற்போது மீண்டும் அவரை இயக்குகிறார். படத்துக்கு 'கொடிவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் மூலம் சசிகுமார் தயாரிக்கும் இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகிகளாக மஹிமா நம்பியார், சனுஷா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் விதார்த், பூர்ணா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x