Published : 17 Jun 2017 03:05 PM
Last Updated : 17 Jun 2017 03:05 PM
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு ஜூன் 21-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. கெளதம் மேனன் தயாரித்து வரும் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் 'ஸ்கெட்ச்' மற்றும் கெளதம் மேனன் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டிலுமே மாறி மாறி நடிக்க முடிவு செய்தார் விக்ரம். ஆனால், 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட பணப்பிரச்சினையில் தடைப்பட்டது. இதனால் 'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரம் கவனம் செலுத்தி தொடங்கவே, படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது தெரியாமல் இருந்து வந்தது. தற்போது ஜூன் 21ம் தேதி முதல் ஸ்லோவேனியாவி-ல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக விரைவில் ஸ்லோவேனியா பயணிக்கவுள்ளார்கள்.
'ஸ்கெட்ச்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை முடித்துவிட்டு, ஜூலையிலிருந்து 'சாமி 2'வில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT