Last Updated : 03 Jun, 2016 05:04 PM

 

Published : 03 Jun 2016 05:04 PM
Last Updated : 03 Jun 2016 05:04 PM

ஜூன் 12-ல் வெளியாகிறது கபாலி இசை

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' படத்தின் இசை ஜூன் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ருத்விகா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் முடிந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரும் படத்தின் DOUBLE POSITIVE எனப்படும் இறுதிவடிவத்தை பார்த்துவிட்டார்கள்.

தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகளை இணைத்து, படத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்யும் பணியில் படக்குழு இறங்கியிருக்கிறது. விரைவில் இப்பணி முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பிக்க இருக்கிறது படக்குழு.

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் ஒய்வில் இருக்கும் ரஜினி, இசை வெளியீட்டுக்கு முன்பு சென்னை திரும்ப இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் உள்ளன.

இந்நிலையில், 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 12ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x