Last Updated : 21 Sep, 2016 07:09 PM

 

Published : 21 Sep 2016 07:09 PM
Last Updated : 21 Sep 2016 07:09 PM

விக்னேஷ் சிவன் - சூர்யா இணையும் தானா சேர்ந்த கூட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்துக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

ஹரி இயக்கத்தில் 'சிங்கம் 3' படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பர் 16-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா. அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்துக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். சூர்யாவோடு ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x