Last Updated : 18 May, 2017 10:26 AM

 

Published : 18 May 2017 10:26 AM
Last Updated : 18 May 2017 10:26 AM

தணிக்கை செய்ய முடியாமல் தவிக்கும் படங்கள்

ஆன்லைன் மென் பொருள் பிரச்சினை காரணமாகத் தணிக்கை செய்ய முடியா மல் தமிழ் திரைப்படத் தயா ரிப்பாளர்கள் திணறி வரு கிறார்கள். இதனால் பல படங் கள் தணிக்கை செய்ய முடியா மல் நிலுவையில் உள்ளன.

தமிழ்த் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, தயா ரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மே 30-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சில சர்ச்சைகளை உண்டாக்கியுள்ள நிலையில், தமிழக விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது வேலைநிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு வருகிறார் விஷால்.

தாங்கள் தயாரித்துள்ள படங்களைச் சீக்கிரமாகத் தணிக்கை செய்துகொண்டு, வேலைநிறுத்த அறிவிப்பு முடிந்தவுடன் பட வெளியீட்டு தேதி போட்டு விளம்பரம் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டார்கள். ஆனால், அதிலும் சிக்கல் ஏற்பட்டுள் ளது. ஒரு படத்தைத் தணிக்கை செய்ய வேண்டு மானால், இனிமேல் ஆன் லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று தணிக்கைக் குழு அறி வித்தது. ஆனால், தமிழகத் தில் ஆன்லைன் மென் பொருளில் தணிக்கைக்குப் பதிவு செய்யமுடியவில்லை என்று தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டினார்கள்.

இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்த தயாரிப் பாளர் சங்கத் தலைவர் விஷால், தணிக்கை அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்தால் மட்டுமே எங்களுக் குத் தணிக்கை செய்யும் அதிகாரம் இருப்பதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 'மாயவன்' உள் ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்ய முடியாமல் திணறி வரு கின்றன.

இப்பிரச்சினை குறித்து மத்தியத் தணிக்கைக் குழு வில் இருக்கும் தமிழக உறுப் பினர் எஸ்.வி.சேகரிடம் கேட்டபோது, “சரியான ஆதார் கார்டு இருக்க வேண் டும். ஆதார் கார்டு எடுத் துள்ளபோது என்ன தக வல்கள் கொடுத்தீர்களோ, அது சரியாக இருக்க வேண் டும். ஆன்லைன் என வரும் போது, அவசியமான தகவல் களைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அந்த அவசியமான தகவல்கள் இல்லையென்றால் உங் களால் பதிவு செய்ய முடியாது. இதைக் கொஞ் சம் புரிந்துகொள்ள வேண் டும். இதற்குத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் உதவ முன்வர வேண்டும். தனது முதல் தயாரிப்பு படத்துக்குச் சரியான தகவல்களைக் கொடுத்துவிட்டீர்கள் என் றால், அடுத்தடுத்த படங் களுக்கு உடனடியாகப் பதிவு செய்துவிட முடியும்.

அதே சமயத்தில் ஆன் லைனில் இல்லாத பல விஷயங்களைக் கேட்டுத் தணிக்கை அதிகாரிகள் தயாரிப்பாளர்களைத் தொந் தரவு செய்யக் கூடாது. ஏதாவது பிரச்சினையென் றால் எனது இ-மெயில் (mylaporemla@gmail.com)முகவரிக்கு அனுப்பினால் நேரடியாக மும்பைக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு உதவத் தயாராகவுள்ளேன்” என்று தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x