Last Updated : 19 Jun, 2016 01:13 PM

 

Published : 19 Jun 2016 01:13 PM
Last Updated : 19 Jun 2016 01:13 PM

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம்

ஆதிக் ரவிச்சந்திரன் - சிம்பு இணையும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடிக்கவிருக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் சிம்பு "அப்படத்தின் இசையமைப்பாளரில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பகக்த்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார் யுவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x