Last Updated : 08 Sep, 2016 09:38 AM

 

Published : 08 Sep 2016 09:38 AM
Last Updated : 08 Sep 2016 09:38 AM

‘இயக்குநர்களின் விருப்பத்தால் நடிக்க வந்தேன்’- இயக்குநர், நடிகர் கரு.பழனியப்பன் நேர்காணல்

‘கள்ளன்’படத்தில் நாயகன், ‘கிராமஃபோன்’படத்தின் இயக்குநர் என்று கரு.பழனியப்பன் தனது அடுத்த ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். பரபரப்பான திரைப்பட வேலைகளுக்கு இடையே அவ்வப்போது தொலைக்காட்சி, சமூக வலைதள விவாதங்கள், திரைப்பட சங்கங்களின் பிரச்சினைகள் குறித்தும் மனம் திறந்து பேசிவரும் அவருடன்… திடம், மணம், ருசி கமழும் ஒரு தேநீர் உரையாடல்.

l ‘மந்திரப் புன்னகை’ படத்துக்குப் பிறகு தற்போது ‘கள்ளன்’ படத்தின் வழியே மீண்டும் நாயகன் அவ தாரம். இந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி அமைந்தது?

நடிக்கிற வாய்ப்பு என்பது எல்லோருக்கும் வருவதில்லை. ஒரு இயக்குநருக்கு நடிப்பதற்கான லட்சணங்கள் இருந்தாலும், அது அவ்வளவு எளிதாக அமையாது. இயக்குநர் சீமான் எனது ‘பிரிவோம் சந்திப்போம்’படத்தைப் பார்த்துவிட்டு, ‘தம்பி இந்தப் படத் துல நீ நடிச்சிருக்கணும்டா!’ன்னு சொன்னார். ஆனால், அப்போது அப்படி எனக்குத் தோணவே இல்லை. பலருக்கும் அவ்வளவு சுலபத்தில் அமையாத அந்த நடிக்கும் வாய்ப்பு அமையும்போது விட வேண்டாம் என்று தோணி யது. அப்படித்தான் நான் நடிகன் ஆனேன்.

தொழில்முறை நட்சத்திர நடிகர்கள் ‘தங்கள் படம் இப்படித் தான் இருக்க வேண்டும்’ என்று விரும்புகிறார்கள். அவர்கள் விரும் பிய வண்ணம் இயக்குநர்களைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், ‘தங்கள் படம் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று விரும்பும் இயக்குநர்கள் என் னைப் போன்றவர்களை நடிகர் களாக்குகிறார்கள். அப்படி எனக்கு அமைந்ததுதான் இந்த ‘கள்ளன்.’

l படம் தற்போது எந்த நிலையில் வளர்ந்து வருகிறது?

படப்பிடிப்பு முடிந்துவிட்டது. டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. படம் இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸுக்கு வந்துடும்.

l இயக்குநரான நீங்கள் முதன்முறை யாக மற்றொரு இயக்குநரின் படைப் புக்குள் ஒரு நடிகராக பயணித்த அனுபவம் எப்படி இருந்தது?

நடிகர் கிஷோர் ஒருமுறை, ‘நடிகன் என்பவன் ஒரு இயக்கு நரின் கருவி’என்று சொன்னார். ஒரு படத்தின் இயக்குநர் என்ன விரும்புகிறாரோ அதை செய்ய வேண்டும். நான் ஒரு மரக்கட்டை. அதை சிம்மாசனமாக்குவதும், கட்டிலாக்குவதும் இயக்குநர் சந்திராவின் கையில் இருக் கிறது என்பதை மட்டும் நினைத் துக்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். ஆறு படங்களை இயக்கிய அனுபவம் உள்ள ஒரு இயக்குநர், இந்த ‘கள்ளன்’ படத்தில் இயக்குநர் சொன்னதை செய்துகொண்டு சும்மாவே இருந்ததும், ஒரு அனுபவமாகத்தான் இருந்தது.

l சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சினிமா தொடங்கி பல விஷயங் களில் ஆதரவோ, எதிர்ப்போ உங்கள் கருத்தை வலுவாக பதிவுசெய்து வருகிறீர்கள். அந்த வகையில் சமீபத்தில் நீங்கள் ரசித்த படம்?

தர்மதுரை. நல் இயல்புகளை யும், நல்ல மனிதர்களையும் சொல்லும் வழக்கம் சினிமாவில் ஒழிந்து வரும் நேரத்தில் நல்ல வரவாக வரும் படத்தை கொண் டாடுவது ரொம்ப முக்கியம். அந்த மாதிரி சூழலில் நல்ல மனிதர் களையும், நல்ல பண்புகளையும் பிரதிபலித்த படமாகத்தான் அதைப் பார்க்கிறேன். சீனு ராமசாமி இந்தப் படத்தை ஒரு முழுமையான வாழ்வியல் படமாக கொடுத்திருக்கிறார். நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

l புத்தக வாசிப்பில் அதிக கவனம் செலுத்தும் இயக்குநர்களில் நீங் களும் ஒருவர். தற்போது எந்த மாதிரியான புத்தகங்களைப் படித்து வருகிறீர்கள்?

எப்போதுமே நான் மேடைகளில் குறிப்பிட்டுச் சொல்லும் நூல் திருக்குறள். இந்த உலகத்தில் நடக்கும் எல்லாப் பிரச்சினை களுக்குமான சாவியை திருவள்ளு வர்தான் வைத்திருக்கிறார். அந்த நூலை நாம் பிள்ளைகளின் மனப்பாடப் பகுதியாக வைத்து அவர்களிடம் இருந்து விலக்கி வைத்துவிட்டோம்.

சமகால எழுத்தாளர்களில் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, பாலகுமாரனின் ‘மெர்க் குரிப் பூக்கள்’, எஸ்.ராமகிருஷ் ணனின் ‘துணை எழுத்து’, ஜெய மோகனின் ‘அறம்’, நாஞ்சில் நாடனின் ‘வாக்குப் பொறுக்கிகள்’, லட்சுமி மணிவண்ணனின் ‘ஓம் சக்தி பராசக்தி’ஆகிய நூல்கள் எல்லாம் என்னை கவர்ந்தவை. எப்போதும் ஃபேவரிட் புத்தகம் என்றால் கே.வி.ஷைலஜா மொழி பெயர்த்த ‘சிதம்பர நினைவுகள்’. ஜி.நாகராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நூல்கள். அடிக்கடி இவற்றை படிக் காமல் என்னால் இருக்கவே முடியாது.

l ‘நடிகர் சங்கத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிடுவேன்’ என்று விஷால் கூறியிருக்கிறாரே?

இதெல்லாமே நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.பி. ஜனநாதன், அமீர் தலைமையில் இயக்குநர் சங்கத் தேர்தலில் தொடங்கப்பட்ட விஷயம்தான். திரைப்பட சங்கத்தில் இளைஞர் கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்று அப்போதே செய்ததுதான். இயக்குநர் பாலு மகேந்திரா, ‘சங்கம் என்பது பொது வேலைகள் பார்க்கிற இடம். அதுக்கு எதுக்கு போட்டி? ஒருவன் வர வேண்டும் என்று விரும்பினால் விட்டுவிட வேண் டியதுதானே. இளைஞர்கள் வரட்டும், வயதானவர்கள் பின் னாடி இருந்து சரிபார்க்கட்டும். சங்கத்தில் பணமும் இல்லை, நலனும் இல்லை என்று எதுக்கு சண்டை’ என்றார். அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

l அடுத்து நடிப்பா? இயக்கமா?

ஒரு படம் நடிக்கிறேன். அதுக்கு முன்பு மாதவன் நடிப்பில் ‘கிராமஃபோன்’ என்ற படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கவுள்ளேன். அவர் இப்போது ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். நானும், மற்ற மற்ற கதாபாத்திரத் தேர்வுகளில் இறங்கியுள்ளேன். விரைவில் பூஜையோடு பட வேலைகளைத் தொடங்க உள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x